கும்பகோணத்தில் லலிதா ஜூவல்லரியின் புதிய ஷோரூம் திறப்பு Dinamani 09th Sep'13
கும்பகோணம் டாக்டர் பெசன்ட் சாலை, கர்ண கொல்லை அக்ரகாரம் அருகே 5 மாடி கட்டடத்தில் லலிதா ஜூவல்லரியின் புதிய ஷோரூம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
உரிமையாளரின் குழந்தைகள் பக்தி, பவ்யா இருவரும் ஷோரூமை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினர்.
கும்பகோணம் நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பல்வேறு வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து லலிதா ஜூவல்லரியின் தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
பிஐஎஸ் 916 ஹால் மார்க் தங்க நகைகளை மிக குறைந்த சேதாரத்தில் லலிதா ஜூவல்லரி மட்டுமே வழங்குகிறது. தங்கம் மட்டுமன்றி வைர நகைகளிலும் முத்திரையை பதித்துள்ளோம். எங்களுக்கு பெரிய உற்பத்திக் கூடம் இருப்பதாலும், மொத்த வியாபாரத்தில் இருப்பதாலும், குறைந்த விலையில் ஆபரணங்களை விற்பனை செய்ய முடிகிறது.
வைர நகைளுக்கும், வெள்ளி பொருட்களுக்கும் தனி பிரிவுகள் உண்டு.
மேலும் நகை சேமிப்பு திட்டம் நடத்துகிறோம். அந்தந்த மாதத்தின் விலைக்கு ஏற்ப தங்கம் இத்திட்டத்தில் சேர்ந்தவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
திட்டத்தின் முடிவில் சேர்ந்த தங்கத்தின் எடைக்கு சமமான தங்க நகையை செய் கூலி, சேதாரம், வரி இன்றி பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை, மதுரை, திருச்சியில் இலவச நகை சேமிப்பு திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது என்றார் -
data from http://www.skyscrapercity.com/showthread.php?t=1285653&page=219
No comments :
Post a Comment